gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:52

சார்த்தூலஹர மூர்த்தி!

ஓம்நமசிவய!

தெவிட்டாத ஞானத்தெளி அருள் போற்றி!
இன்புறு கருணையின் இனிதருள் போற்றி!
இருவினை தம்மை அறுப்பாய் போற்றி!
இருள் கடிந்தென்னை ஏந்துக போற்றி!
நலம் ஒரு நான்கும் தந்தருள் போற்றி!
மலம் ஒரு மூன்றின் மயக்கறு போற்றி!


சார்த்தூலஹர மூர்த்தி!

தவத்தில் சிறந்த தருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர். உண்மையறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி நடத்தி அதில் தோன்றிய புலி, மழு, மான் கன்று ஆகியவற்றை ஏவினர். புலியைக் கொன்று ஆடையாக அணிந்தார். புலி மாண்டு போனதைக் கண்ட முனிவர்கள் யானை, மான், பாம்புகள், விலங்குகள், பூதங்கள், மழு முதலியவற்றை ஏவ சிவன் விலங்குகளைக் கொன்றார், மழுவை படைக்கலமாக மாற்றினார், பூதங்களை சிவபூதகணங்களாக மாற்றினார், முயலகன் சிவனின் காலடியில் தள்ளப்பட இவற்றையெல்லாம் கண்ட முனிவர்கள் நிலை தடுமாற அவர்கள்பால் இரக்கம் கொண்டு அவர்களுக்கு ஞானத்தை அளித்து அவர்கள் உள்ளத்தில் உள்ள மாசினை அகற்றினார். மயக்கம் தெளிந்த முனிவர்கள் இறைவனை வணங்கினர்.
புலியைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்த வடிவமே- சார்த்துலஹரமூர்த்தி

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:49

ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்!

ஓம்நமசிவய!

பொருந்தவே வந்தேன் உளம்புகு போற்றி!
குருவடிவாகி ஆட்கொள் போற்றி!
திருவடி வைத்தே அருள்வாய் போற்றி!
வாடா வகைதான் வழங்குக போற்றி!
கோடயுதத்தால் வினைதீர் போற்றி!
உவட்டா உபதேசம் புகட்டுக போற்றி!


ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்!

 

வாணாசுரன் மாபலிச் சக்கரவர்த்தியின் மகன் சிறந்த சிவபக்தன். சிவனை நோக்கித் தவமிருந்து அக்னிமதிலும், உலகம் முழுமையும் ஆட்சிபுரியும் ஆற்றலும், அழியாமையும், தங்களின் அடித் தாமரையில் அன்பும் வேண்டும் என்று வேண்டி பெற்றான். வரம் பெற்று மிகுந்த வலிமையுடையோனாய் இருந்தவன் மீண்டும் சிவனை நோக்கித்தவமிருந்து விநாயகர், முருகன், அன்னை அம்பிகை மூவருடன் சிவபெருமான் தன்னுடைய மாளிகையில் எழுந்தருளி வீற்றிருக்க வரம் பெற்றான். எல்லோரும் தன் இல்லத்தில் இருந்ததால் வலிமை பெற்று அனைவரையும் போரில் வென்று இனி போரிட யாருமில்லை என்ற நிலையில் சிவபெருமானைப் பார்த்து என்னுடன் தாங்கள் போர் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுக்க சிவன் கண்ணன் துவாரகையிலிருந்து வந்து உன் தோள் தினவைத் தீர்ப்பான் என்றார். கண்ணன் என்னிடம் பலமுறை தோற்றவன் எனக்கூற இப்போது அவர் முன்னைவிட பலசாலியாக இருக்கின்றார் என்றார் சிவன்.
வாணாசூரனின் மகள் உசை கண்ணபிரானனின் மகன் அநிருத்தன் தன்னோடு கலந்ததாக கனவு கண்டு கருவுற்றாள். தன் மகளின் நிறைவான நிலையை அழிந்தது கண்ட வாணாசுரன் அநிருத்தனைச் சிறையிலிட கண்ணபிரான் அநிருத்தனை மீட்க படையுடன் வந்தார். முதல் வாயிலில் விநாயகரும் இரண்டாம் வாயிலில் முருகனும், மூன்றாம் வாயிலில் உமாதேவியரும் காட்சியளிக்க அனைவரையும் பணிந்து வணங்கிய கண்ணபிரான் அடுத்த வாயிலில் சிவனைக் கண்டு பணிந்து வணங்க சிவனின் குடும்பமே இங்கு இருக்கும்போது எப்படி போரிட்டு வெல்வது என்ற திகைப்பில் இருந்த கண்ணபிரானிடம் சிவன் எங்களை வெல்லாமல் வாணாசூரனை வெல்ல முடியாது என்றார். இருப்பினும் அவனிடம் நீ வருவதை முன்பே சொல்லியனுப்பிவிட்டேன். நீ விளையாட்டாய் என்னுடன் போர் புரிக என்றார் சிவபெருமான்.
சிவனுக்கும் திருமாலுக்கும் போர் தொடங்கியது. ஓர் நிலையில் திருமால் ஐயனே என் சக்தி எல்லாம் திரட்டி போர் செய்து விட்டேன் இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். கண்ணன் வெற்றி பெற வேண்டும் என நினைத்த சிவபெருமான் வாணாசூரன் என்னை வணங்கிய இரு கரங்களைத் தவிர மற்றவைகளை வெட்டிச் சாய்திடுக என அறிவுரை கூறி போரிலிருந்து விலகினார். அவ்வாறே கண்ணன் வாணாசூரனிடம் போர் புரிந்து அவனது இரு கரங்களைத் தவிர மற்ற கரங்களை வெட்டி வீழ்த்தினார். வாணாசூரனின் ஆணவம் அடங்கியது. என்ன வாணாசுர உன் போர் வெறியின் தினவு நீங்கியதா எனச் சிவன் கேட்டார். தன் தவறைப் பொறுத்தருளுமாறு வேண்டினான் வாணாசூரன். அவனுடைய கைகள் மீண்டும் பெற அருள் புரிந்து அநிருத்தனை விடுவித்து அவனுக்கும் வாணாசுரனின் மகள் உசைக்கும் திருமணம் நட்த்தினார் பெருமான்.
சிவபெருமானுக்கும் கண்ணபிரானுக்கும் இடையில் போர் நட்ந்தபோது கண்ணன் சிவனுக்கெதிராக குளிர் சுரத்தை ஏவினார். அதை அழிக்க சிவன் வெம்மைச் சுரத்தை ஏவினார். வெம்மைச்சுர மூர்த்திக்கு 3 தலைகள், 3 கைகள், 9 விழிகள், 3 கால்கள் இருக்கும். இடது காலைத்தூக்கி நடன கோலத்தில் இருப்பார். மற்ற இரு கால்கள் நிலத்தில் இருக்கும். இடப்பக்கம் இரண்டு கைகள் ஒன்று வீசிய கை. மற்றொரு கையில் படைக்கலம். வலக்கை காக்கும் கை. 3 தலைகளுக்கு மேல் தீச்சுடர். கால்களுக்கு கீழே ஸ்ரீ சக்கரம்.
குளிர் சுரத்தை நீக்க வெம்மை சுரத்தை ஏவிய சுரம் நீக்கும் பரமன் வடிவம்-ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்!. காட்சி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி; சாட்டியாங்குடி (திருவாரூர் அருகில்), பவானி சங்கமேஸ்வரர். திருவில்லி புத்தூர் வைத்திய நாத சுவாமி.

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:23

கங்காவிசர்ச்சனர்!

ஓம்நமசிவய!

செயப்படு பொருளும் நீயே போற்றி!
சொந்தாமரைப் பூம்பாதம் போற்றி!
அற்புதக் கற்பகக் களிறே போற்றி!
முப்பழம் நுகரும் அப்பனே போற்றி!
இப்பொழுது என்னை ஆட்கொள் போற்றி!
தாயாய் எனக்கும் எழுந்தருள் போற்றி!


கங்காவிசர்ச்சனர்!

அயோத்தி மன்னன் சகரன் அசுவமேதயாகம் செய்ய அதனால் தன் பதவிக்கு ஆபத்து வரும் என அஞ்சிய இந்திரன் அசுவமேதக் குதிரையை கபில முனிவர் தவம் செய்யும் பாதாளக் குகையில் கட்டிப் போட்டான். சகரனின் மக்கள் அறுபதினாயிரம் பேர் தன் தந்தையின் கட்டளைப்படி குதிரையைத் தேடி இறுதியில் பாதாள லோகத்தில் கண்டு பிடித்து அச்செயலுக்கு காரணம் கபிலமுனி எனத் தவறாக நினைத்து அவரை துன்புறுத்த கபில முனி அனைவரையும் எரித்து சாமபலாக்கினார். தன் புதல்வர்கள் இறந்ததை அறிந்த சகரன் மிகவும் வருந்தினாலும் யாகத்தை முடிக்க தன் பேரன் அஞ்சுமானை கபில முனியிடம் அனுப்பி யாகம் நிறைவடைய உதவுமாறு பணிந்து கேட்க யாகம் நல்லபடியாக முடிந்தது.
இந்த மன்னன் மரபில் தோன்றிய பகீரதன் மூதாதையர் முனிவர் சாபத்தால் சாம்பலாகி நரகத்தில் உழல்வது அறிந்து அவர்களை நற்கதி அடைய நான்முகனை நோக்கி கோகர்ணத்தில் தவமிருந்தான். வானுலகிலிருந்து ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டுவந்தால் நரகத்தில் இருக்கும் உன் முன்னோர்கள் நற்கதி அடைவர் என பிரம்மன் கூறினார். உடன் ஆகாய கங்கையை நோக்கி பகீரதன் தவமிருக்க தோன்றிய கங்கை தன் பாரத்தையும் வேகத்தையும் பூமி தாங்காது. அதை தாங்கக் கூடியவர் சிவபெருமான். அவர் மனம் வைத்தால்தான் நீ நினைத்த செயல் கைகூடும் என்றாள்.
பகீரதன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். சிவன் திருவுள்ளம் கொண்டு வேகம் கொண்ட கங்கையைத் தன்சடை முடியில் தாங்கிக் அதன் ஒரு பகுதியை பூமியின் மீது விடுவித்தார். பகீரதன் வழிகாட்ட கங்கை பூமியில் பாயத் தொடங்கினாள். வழியில் ஜானவி முனிவர் ஆசிரமத்தை கங்கை மூழ்கடிக்க முனிவர் கங்கையை அள்ளிக் குடித்து கங்கையை தன்னுள் சிறைப்படுத்தினார். இதைக் கண்ட பகீரதன் கலங்கி தன் நிலைப் பற்றி முனிவரிடம் எடுத்துச் சொல்லி அதற்கு உதவ வேண்டுகோள் விடுக்க ஜானவி முனிவர் கங்கையை விடுவித்தார். பின் கங்கையை பகீரதன் பாதாள உலகத்திற்கு அழைத்துச் சென்று கபிலமுனிவரின் ஆசியுடன் மூதாதையரின் எலும்பு மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்து புனிதப்படுத்தி சகர புத்திரகள் அனைவரும் செர்க்கம் செல்ல வழி வகுத்தான்.
இது பகீரதப் பிரயத்தினம் என வழங்கப்பட்டது. பகீரதனால் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி எனப் பெயர் பெற்றது. ஆகாய கங்கையை செஞ்சடையில் தாங்கி அதனைப் பூமியில் விடுவித்த கோலம் கங்கா விசர்ச்சன மூர்த்தி வடிவம். சடை, கொன்றை, கூவிளமாலை, மதியம் சூடி கங்கையை ஏற்று அருள் குறிப்புடன் விளங்கும் வடிவம். காட்சி, மயிலாடுதுறை, திருக்கடவூர், திருப்பனந்தாள், திருமீயச்சூர் ஆகிய ஆலய தேவகோட்டத்தில். கேதாரம். வைத்திச்சுவரன் கோவில்.

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:21

கங்காதரர், கங்காதரமூர்த்தி!

ஓம்நமசிவய!

தீயின் மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியின் இரண்டாய் வதிந்தாய் போற்றி!
வெளியின் ஒன்றாய் விளங்கினாய் போற்றி!
உலகனைத்துமாய் ஒளிர்வாய் போற்றி!
உவந்தன் சரணம் அடைந்தோம் போற்றி!
செய்வினை முதலும் நீயே போற்றி!


கங்காதரர், கங்காதரமூர்த்தி!

 

கயிலையில் சிவபிரான் வீற்றிருக்கும்போது உமை விளையாட்டாக அவர் கண்களை மூட அனைத்துலகங்களுக்கும் பேரொளியாய் இருக்கும் பொருமானின் கண்கள் மூடப்பட்டதும் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. உயிர்கள் என்ன நடந்தது எனப்புரியாமல் தத்தளிக்க உயிர்களின் துன்பத்தைப் போக்க இறைவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து உலகம் ஒளிபெறச் செய்தார். திங்கள் செஞ்சுடர், தீ முதலிய சுடர்களுக்கும் ஒளியூட்டினார். தன் விளையாட்டு செயலால் நடந்ததை உணர்ந்த உமை விழிகளை மூடிய கரங்களை எடுத்தார். இருந்தாலும் அந்த நிகழ்வால் அச்சம் ஏற்பட்டு அவரது உடம்பில் வியர்வைத் துளிகள் தோன்றி கங்கை நீராகப் பெருக்கெடுக்க அந்த வேகத்திலிருந்து உயிர்களைக் காக்க சிவன் அந்த கங்கை நீரை தனது தலைச் சடையின் நுனியில் தரிக்க உலக உயிர்கள் நிம்மதி அடைந்தன. உயிர்களுக்கு ஈடில்லாத ஆனந்தம் தருபவர். இவ்வாறு கங்கையின் நீர்பெருக்கை தன் சிகையில் தரித்து அடக்கிய வடிவம்- கங்காதர மூர்த்தி.
சிவன் தன் இடக்காலை வளைத்து வலக்காலை நேராகத் தரையில் ஊன்றி நிற்கும் நிலை. உமையை முன் இடக்கையால் அனைத்தபடி கன்னத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் பாவனை. பின் வலக்கை மழுவுடன் கங்கை பொருந்திய சடையைத் தொட்டவாறும், இடக்கை மானுடனும் இருக்கும். உமையின் வலக்கால் நளினமாக ஓரளவு வளைந்து இடக்கால் நிமிர்ந்தும் இடக்கை மலரேந்தியும் வலக்கை தொங்கியவாறு காணப்படும். காட்சி: சிவாலயங்களில் தேவகோட்டத்தில்.

#####

ஓம்நமசிவய!

அடியார் உள்ளக் கோயிலாய் போற்றி!
அறக் கருணை புரி அழகா போற்றி!
பொருள் நான்கினையும் தருவாய் போற்றி!
புகுந்தென் உள்ளம் பிரியாய் போற்றி!
மண்ணின் ஐங்குணம் ஆனாய் போற்றி!
நீரிடை நான்காய் நின்றாய் போற்றி!


சண்டதாண்டவ மூர்த்தி-காளிகாதாண்டவ மூர்த்தி!

 

நிசும்பன், சும்பன் அசுரர்களின் துன்பங்களைத் தாங்கமுடியாமல் தேவர்கள் பார்வதியை நோக்கித் தவமிருக்க, பார்வதி இறைவன் அனுமதியுடன் அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார். அம்பிகையின் அழகைக் கேள்வியுற்ற நிசும்பன் தன்னை மணக்க தூதனுப்ப, என்னைப் போரில் வெல்பவரையே நான் மணக்க இயலும் என்று செய்தியை அனுப்ப, போர் நிகழ்ந்தது. சண்டன், முண்டன், நிசும்பன், சும்பன் அனைவரையும் அன்னை மாய்த்தாள். அப்போது போர் புரிந்த ரத்தபீசனன் உடலிருந்து எத்தனைச் சொட்டு இரத்தம் சிந்துகிறதோ அந்த அளவுக்குப் பல ரத்த பீசர்கள் உருவாகி போரிட்டனர். அவன் அழிந்தாலன்றி போர் முடிவுறாது என்பதை அறிந்த அன்னை சிவன் உதவியுடன் காளியைத் தோற்றுவித்தார்.
காளி ரத்தபீசனின் இரத்தம் பூமியில் விழுந்து உயிர் பெறுமுன்னரே அதைக் குடித்துவிட அன்னை அவனை வெட்டிச் சாய்த்தார். மகிழ்ந்த அம்பிகை காளிக்கு சண்டி எனப் பெயரிட்டு இறைவனுடன் நடனம் ஆடும் பேரினையும் அளித்தாள். அம்பிகை வரம் அளித்ததாலும் ரத்தபீசனின் இரத்தத்தைக் குடித்ததாலும் காளிக்கு ஆணவம் ஏற்பட்டு சினம் கொண்டு காண்போரை நடுங்க வைத்தாள். இச்செய்தி கேட்ட சிவன் காளியின் ஆணவப்போக்கினை அகற்ற காளி இருக்கும் திருவாலங்காட்டினை அடைந்தார்.
சிவனின் படைகளுடன் மோதிய காளியின் படைகள் அழிந்தன. காளி அவரை நடனப் போட்டிக்கு அழைத்தார். இருவரும் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது இறைவனுடைய திருச்செவியிலிருந்த குண்டலமானது நடன வேகத்தில் விழ அதை நடனமாடியபடியே காலினால் எடுத்து காதிலே அணிந்தார் இறைவன். இந்தகைய ஆட்டத்தை காளியினால் ஆடமுடியவில்லை. அதனால் தோல்வி அடைந்தாள்.
சிவனின் ஐந்தாவது செயலாகிய அருளல் செயலை குறிக்கும் வடிவம். மிகவேகமாகச் சுழன்று ஆடியதால் சண்ட தாண்டவம் எனப்பட்டது. ஒரு காலை தலைவரையில் மேலே தூக்கி ஆடுவதாகையால் ஊர்த்துவ தாண்டவம், வீடு பேற்றினைத் தருவதாகிய அனுக்கிரகத்தின் பொருட்டுச் செய்ததாகையால் அனுக்கிரக தாண்டவம் எனப்பட்டது. காளியின் செருக்கை அடக்க மிக வேகமாக விரைவான கதியில் ஆடிய நடனம். நிகழ்வு நடைபெற்றத் தலம்: திருவாலங்காடு.

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:15

சதா நிருத்த மூர்த்தி!

ஓம்நமசிவய!

கருணை முதிர் இளங்கன்றே போற்றி!
கரகம் கவிழ்த்த கரியே போற்றி!
கயமா முகனைக் கடிந்தாய் போற்றி!
விக்ன விநாயகா விமலா போற்றி!
எனை நினைந்தடிமை கொள்வாய் போற்றி!
உனை நான் நினைய அருள்வாய் போற்றி!


சதா நிருத்த மூர்த்தி!

எல்லா உயிர்க்கும் அவரவர் நிலைக்கேற்ப ஆணவமல இருளைப் போக்கி வினைகளை அகற்றி பரம்பொருளோடு இரண்டறக் கலத்தலாகிய முத்தி அருளுதற் பொருட்டு பஞ்சாட்சரமே திருமேனியாகக் கொண்டு ஐந்தொழில்களையும் ஒருசேர இயற்றும் பஞ்சகிருத்திய திருநடனத்தை எஞ்ஞான்றும் இயற்றும் அருள் வடிவே சதா நிருத்த வடிவமாகும். இந்த தாண்டவமே உலகம் படிக்கவும், வினைப்போகம் உள்ளவும் காக்கவும், பின்னர் ஒடுக்கவும், வினைகளை மறைத்தல் தொழிலால் நுகர்விக்கவும் பின் அருளவும் பயன் படுகின்றது.
சிவனின் கையிலுள்ள துடி படைத்தலைக் காட்டும்- துடியைக் கொட்டுவதால் ஆன்மாக்களின் மாயையை உதறுகின்றான்., அபயகரம் காத்தலைக் காட்டும்- உயிர்களை இன்பக் கடலில் திளைக்கச் செய்கின்றான்., கையிலுள்ள நெருப்பு அழித்தலைக் காட்டும்- அதனால் கன்ம மலத்தினைச் சுடுகின்றான்.. முயலகன் மீது ஊன்றிய பாதம் மறைத்தலைக் காட்டும்-ஆணவ மலத்தை அழுத்தித் தேய்விக்கின்றான். தூக்கிய திருவடி அருளலைக் காட்டும்-உயிர்களைப் பிறவிக் கடலிலிருந்து எடுக்கின்றான். இதையே பஞ்ச கிருத்தியம் என்பர். மலங்களை நீக்கி ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தும் அம்பலத்தானின் திருக்கோலத்திற்கேற்ப இவ்வுலகம் இயங்குகின்றது.
ஐந்தொழிலால் உலகைத் தொழிற்படுத்தற் பொருட்டாகக் கொள்வதை ஊன நடனம் என்றும் இவ்வகைத் தொழிலால் அருள் செய்வதை ஞான நடனம் என்று கூறலாம் நான்கு கரங்களும் மூன்று கண்களும், பரந்த சடையும், பொன்னிறமும் கூடியவராய் மயில் தோகை சூடிய முடியின் வலப்பக்கம் பிறையும் ஊமத்த மலரும், வலச்சடையின் நுனியில் கங்கையையும் புனைந்து வலக்காதில் மகரகுண்டலம், இடக்காதில் இலையும் பூண்டு, அணிகள் பல அணிந்து புலித்தோல் உடுத்தி பின் வலக்கையில் உடுக்கை பின் இடக்கையில் தீயகலும், முன் வலக்கையில் அபயமும், முன் இடக்கையை நீட்டி ஆடும் தாண்டவம். வலது காலை முயலகன் மீதும் இடது காலை வலப்பாகமாக நீட்டி ஆடுகின்றார். பஞ்சகிருத்திய நடனத்தை ஏஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்..காட்சி: தில்லை

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:07

சந்தியா தாண்டவ மூர்த்தி!

ஓம்நமசிவய!

பரமன் ஆகிய கணேசா போற்றி!
பாரதம் எழுதி பரூஉக்கர போற்றி!
மாரத அச்சொடி மதவலி போற்றி!
சித்தி யானை தன் பொற்பதம் போற்றி!
சச்சிதானந்த போகமே போற்றி!
காரணனே எம் கணபதி போற்றி!


சந்தியா தாண்டவ மூர்த்தி!

சிவபெருமானைக் கலந்து ஆலோசிக்காமல் அசுர்ர்களும், தேவர்களும், பிரம்மனும், திருமாலும் ஒன்/றுகூடி அமுத்த்தைப் பெற திருப்பாற்கடலைக் கடைவதென்று முடிவெடுத்து மந்தாரமலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி, பாம்பின் தலைப் பகுதியை அசுர்ர்களும் வால்பகுதியை தேவர்களும் பிடித்து கடையத் தொடங்கினர். மந்தார மலை உறுதியாய் நிற்காமல் நிலை பிறழ, திருமால் ஆமை வடிவம் கொண்டு அதனைத் தாங்கிப் பிடித்தார். வேகமாகக் கடைய வாசுகி வலியால் துடித்து ஆலகால நஞ்சைக் கக்கியது. திருமால் அதனால் கருகினார். தேவர்களும் அசுரர்களும் இப்போதிருக்கும் வாழ்நாளையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது சிவன் ஞாபகம் வர அனைவரும் ஒன்று சேர்ந்து அபயக் குரலில் அழைக்க வந்த சிவன் நிலையறிந்து அந்த நஞ்சினை சுந்தரர் எடுத்து தர விழுங்கினார். சிவன் சிறிது நேரம் கண்ணயர உமை உபசரிக்க அமரர் சிவனை அர்ச்சித்தனர். தேவர்கள் இரவு முழுவதும் கண்விழித்திருந்தனர். அந்த இரவே ஏகாதசி எனப்படும். இறைவனின் திருப்பெயரை அன்று இரவு முழுவதும் மற்றும் அடுத்த நாளும் போற்றிக் கொண்டாடினர். அந்நாளை நாம் துவாதசி என்கின்றோம். அதற்கு அடுத்த நாளான திரயோதசியில் சிவன் எல்லோரும் காண சூலத்தைச் சுழற்றி தாருகமேந்தி ஒரு ஜாமப்பொழுது ஆடினார். அக்காலத்தை வேத ஆகமங்கள் பிரதோசம் என்கின்றன.
நித்ய பிரதோசமான மாலையும் இரவும் கலக்கும் பொழுதில் திருக்கயிலையில் சிவன் நடனமாடுவார். அம்பிகை அருகிலிருந்து காண நடனம் செய்யும் கோலத்தில் இருக்கும் வடிவமே மாலைநேர நடன வடிவம். இத்திருக்கோலத்தை காண்பவர்கள் தங்களது பாவங்கள் தோலைந்து புதிய வாழ்வினைப் பெறுவார்கள்.
பிரதோச காலமும், மாலைநேர நடனக் கோலமும் உணர்த்துவது என்ன வென்றால் அனைத்திற்கும் மூலமான சிவனாரின் அனுமதியின்றி செய்யப்படும் எந்தக் காரியமும் நிறைவடையாது. இதனை கௌரி தாண்டவம், இலக்குமி தாண்டவம், ரட்ச தாண்டவம், சந்தியா தாண்டவம் என்பர்.
இறவனுக்கு எட்டு அல்லது நான்கு கைகள். வலக்கைகள் இரண்டில் துடியும், அபய முத்திரை / மயிலிறகு இஅக்கைகள் இரண்டில் பாம்பும், கஜ அஸ்தம் இருக்கும். இடப்புறத்தில் நந்தி மற்றும் கௌரி / திருமால் இருப்பர்.
இன்பக்காத்தல் செயலைக் குறிக்கும் மாலைநேர நடனமான சந்திய தாண்டவம். காட்சி: கூரம் (காஞ்சி), திருமழபாடி, திருப்பரங்குன்றம், எல்லோராக் குகை.

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 09:02

புஜங்கத்திராச மூர்த்தி,!

ஓம்நமசிவய!

பரில சேடம் அளிப்பாய் போற்றி!
எண்ணிய எண்ணியாங்கு ஈவாய் போற்றி!
தண்கடமாமுகத் தலைவா போற்றி!
முக்கட் செம்மேனியெனே போற்றி!
முக்கட் பரமாம் முதல்வா போற்றி!
வரம் எல்லாம் தரு வள்ளல் போற்றி!


புஜங்கத்திராச மூர்த்தி,!

பாம்புகளை அடக்கிய துன்பக் காத்தல் செயல்- உயிர்கள் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப துன்பங்களைக் கொடுத்து அவற்றின் வினைகளை அழித்து காத்தல் துன்பக்காத்தல் எனப்படும்.
தவத்தில் சிறந்த தருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர். உண்மையறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி நடத்தி அதில் தோன்றிய புலி, மழு, மான் கன்று ஆகியவற்றை ஏவினர். அவற்றைவையெல்லாம் உடை, பாதச்சிலம்பு, ஆயுதம், சிரோமாலை, சேனை ஆகியவையாக மாற்றினார். யாகத்திலிருந்து கொடிய நாகங்கள் இறைவன்மீது ஏவப்பட அவைகள் தங்களிடமுள்ள காளி, காளாஸ்திரி, யமன், யமதூதன் ஆகிய நான்கு நச்சுப் பற்களால் அண்ணலை அணுக ஆதிநாளில் கருடனுக்கு அஞ்சி தம்பால் சரணடைந்த பாம்புகளை உடலில் தாங்கிருந்தவர், அவைகளுடன் இப்பாம்புகளையும் ஏற்று ‘உமது குலத்தாருடன் ஒன்றுகூடி வாழுங்கள் என்று அவைகளை திருக்கரம், திருவடி, அரை முதலிய இடங்களில் கங்கணம், காலனி, அரைநாண் முதலியவனவாக அணிந்தார். எந்த நாகங்களுக்கும் கெடுதல் செய்யாமல் தாமும் தம் பகைவர்களைச் சீறிப் பயமுறுத்தவேண்டும் ஆனால் தீங்கிழைக்கலாகாது என்ற உயரிய தத்துவத்தை உணர்த்தும் வடிவம் புஜங்கதிராச மூர்த்தியாகும்.
சிவனின் மறக்கருனையாகிய துன்பக் காத்தல் செயலைக் குறிக்கும் நடனம் புஜங்கத்திராச நடனம் எனப்படும். நிகழ்வு நடந்த தலம்: திருப்புத்தூர்

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 08:58

புஜங்கலளித மூர்த்தி!

ஓம்நமசிவய!

மதிப்பவர் மனத்துறு மணியே போற்றி!
நெடும்பொறிற் சரணம் அடைந்தோம் போற்றி!
நெஞ்சத்து ஒடுங்கும் நீரினாய் போற்றி!
ஆரண நுண்பொருள் ஆனாய் போற்றி!
ஆட்கொண்டருளும் அரனே போற்றி!
பக்தர் சித்தத்தை அறியுமானாய் போற்றி!


புஜங்கலளித மூர்த்தி!

பயன்களை உயிர்களுக்கு கொடுத்து அருளும் இன்பக்காத்தல்- என்ற இறைவனது ஐந்து தொழில்களில் காத்தல் என்பது இருவகைப்படும். இன்பக்காத்தல், துன்பக்காத்தல் எனப்படும். உயிர்கள் செய்த தன்வினைக்கு ஏற்ப இன்பப் பயன்களைக் கொடுத்து அவ்வுயிர்களுக்கு அருளுதல் அறக்கருணையாகிய இன்பக்காத்தல் எனப்படும். இன்பக்காத்தல் தொழிலைக் குறிக்கும் நடனம் புஜங்கலளித நடனம் எனப்படும். ஆன்மாவைக் குறிக்கும் குறியீட்டுப் பொருளான பாம்பினைக் கையில் ஏந்தி அதனை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாகும்.
காசிப முனிவரின் மனைவியருள். கத்துரு, வினதை இருவருக்கும் தங்களுள் யார் சிறந்த அழகி எனப் போட்டி வர இருவரும் கணவரிடம் சென்று கேட்க காசிபர் கத்ருவே அழகில் சிறந்தவள் எனக்கூறிவிட்டதால் இருவரின் நிபந்தனைப்படி தோற்ற வினதை கத்ருவிற்கு அடிமையாக இருத்தல் வேண்டும். வினதை தன் இளய மகன் கருடனிடம் இதுபற்றிக்கூற அவன் தன் பெரியம்மாவிடம் இந்த அடிமைத் தளையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் எனக்கேட்க கத்துரு தேவலோகத்திலுள்ள அமிர்தம் கொண்டுவந்தால் விடுவிக்கின்றேன் எனக்கூறினாள்.
கருடன் தேவலோகத்தில் அமிர்த கலசத்தை காவல் புரிந்தவர்களுடன் போரிட்டு வென்று அமுத கலசத்தை கைப்பற்ற திருமால் அவனை எதிர்த்தார். இருவருக்கும் நடந்த சண்டையில் திருமாலால் கருடனை வெற்றி கொள்ள முடியவில்லை. அப்போது கருடனின் வீரத்தைப் பாராட்டிய திருமால் உனக்கு வேண்டும் வரம் கேள் எனக்கூற கருடன் சிரிப்புடன் நீ யார் எனக்கு வரம் தருவதற்கு நான் உனக்கு வரம் தருகின்றேன் கேள் என ஆணவத்துடன் கூற சரியான சந்தர்ப்பம் என்று திருமால், பாம்புகளுக்கு அமுது ஊட்டலாகாது. நீ எனக்கு வாகனமாக வேண்டும் என்று இரு வரம் கேட்க உண்மையைப் புரிந்த கருடன் அகந்தை அழிந்து பாம்புகளுக்கு எதிரியாகவும் திருமாலுக்கு வாகனமாகவும் மாறினான். அமுத கலசத்தை கொண்டுவந்து தன் தாயை விடுவித்து அமிர்தத்தை தர்ப்பைமேல் ஊற்றினான்.
திருமாலின் வாகனமான கருடனைக் கண்டு பாம்புகள் அஞ்சின. அவைகள் ஒரு லிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தன. காட்சி கொடுத்த சிவனிடம் தங்களிடம் அருள் பெற்றதாலும், திருமாலின் வாகனமானதாலும், மாற்றான் தாய் மகனானதாலும் கருடன் எங்களை கொல்வதால் அவனால் எங்களுக்கு இறவா வரம் அளிக்க வேண்டின. அவைகளுக்கு அருள் புரிந்து அவைகளைத் தனது மேனியில் ஆபரணங்களாக அணிந்துகொண்ட வடிவமே புஜங்கலளித மூர்த்தி. புஜங்கம்- பாம்பு, லளிதம்- அழகு செய்தல். நிகழ்வு நடந்த தலம்-திருப்புத்தூர்.

#####

வெள்ளிக்கிழமை, 08 September 2017 03:11

இடபாந்திகர்!

ஓம்நமசிவய!

வேழமுகத்துக் கடவுளே போற்றி!
பேழைபெரு வயிறுடையாய் போற்றி!
இருகையுடைய எந்தாய் போற்றி!
ஒருகை லிங்கம் எந்தினாய் போற்றி!
மணம்விரி மலர்த்தொடை சூடினாய் போற்றி!
மாமதச் சிந்தூரக் களபமே போற்றி!


இடபாந்திகர்!

 

2000 சதுர்யுகங்களை கொண்டகாலம் நான்முகனின் ஒருநாள். அத்தகைய நாட்களையுடைய ஆண்டுகள் நூறு கொண்டது அவரின் ஆயுள். அது திருமாலின் ஒரு நாள். அப்படி நாட்களைக் கொண்ட நூறு ஆண்டுகள் கழிந்தால் உலகின் எல்லா ஆன்மாக்களும் அழியும். இது பேரூழிக்காலத்தின் நிலையாகும். அப்போது பரம்பொருளாகிய சிவன் உமா காண ஊழித்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அனைத்து உயிர்களும் அந்தப் பிரளயத்தில் ஒடுங்கிக் கொண்டிருந்தது. அப்போது தருமதேவதை தானும் அவ்வாறு ஒடுங்க வேண்டி வருமென அஞ்சி இடப வடிவம் கொண்டு சிவனிடம் தஞ்சமடைந்தது. அதற்கு அஞ்சேல் எனக்கூறி கிருதாயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் மூன்று கால்களுடனும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களுடனும், கலியுகத்தில் ஒரு காலுடனும் இடபமாக இருக்க அருள். ஒவ்வொரு யுகத்திலும் தருமம் வீழ்ச்சியடைந்து அதன் நிலை மாறுபடும் என்பதை உணர்த்தவே இவ்வாறு அருள் புரிந்துள்ளார். எல்லாம் அழியக் கூடிய ஊழிக்காலத்தில் தர்மதேவதையாகிய வெள்ளிடையை ஆதரித்த காரணத்தால் சிவபெருமான் இடபாந்திகர் எனப்பட்டார்.
இடபமாகமாறிய தர்மதேவதை-அறத்திற்கு உயிர் கொடுத்த தயாநிதி. காளையின் மீது சாய்ந்தபடி அதன் கொம்புகளுக்கு இடையில் தனது கரத்தினை வைத்த தோற்றம் இடபாந்திகர் வடிவமாம். காட்சி: திருவாவடுதுறை

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27100346
All
27100346
Your IP: 18.188.61.223
2024-04-28 02:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg